தி.மு.க அமைச்சர் தம்பி வீட்டில் ஆட்டையை போட்ட கொள்ளையர்கள் !
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தம்பி வீட்டில் கொள்ளை நடந்துள்ளது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தண்டுபத்தைச் சேர்ந்தவர் சுதானந்தன், மருத்துவரான இவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சகோதரர் ஆவார். 3 நாட்களுக்கு முன்பு தண்டுபத்தில் நடந்த கொடை விழாவுக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சுதானந்தன் சென்றுவிட்டார்.
இன்று காலை அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டை பார்த்த போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.
வீட்டின் பீரோக்களும் , லாக்கரும் உடைக்கப்பட்டு கிடந்தன. நகை, பணம் கொள்ளை போனது எவ்வளவு என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.