திருச்சி மாநாட்டுக்கு செல்ல பணம் இல்லை: RTOவாக மாறி வசூல் வேட்டையில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் கைது.!
பெரம்பலூர் அருகே 'ஆர்.டி.ஓ' என்று கூறிக்கொண்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் பணம் வசூல் செய்த திமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தேனி மாவட்டம் அனுமந்தம்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார் 45, திமுக இளைஞரணி உறுப்பினராக இருக்கிறார். இவர் நேற்று திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு வருகை புரிந்துள்ளார். இதனிடையே அவர் பெரம்பலூர் மாவட்டம் இரூர் அரூகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு தான் ஒரு ஆர்.டி.ஓ. எனக் கூறிக்கொண்டு, வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்னர். இதனையடுத்து ரோந்து சென்ற போலீசார் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் கூறும்போது, நான் திமுக இளைஞரணி உறுப்பினர் என்று கூறியதுடன், அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார்.
மேலும், திமுக மாநாட்டிற்கு வந்தபோது வழிச் செலவுக்காக பணம் இல்லாததால் ஆர்.டி.ஓ. என்று கூறி வசூலில் ஈடுபட்டேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து செல்வகுமாரிடம் இருந்த இன்னோவா காரை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் ஒழிப்பேன் என்று பேசி வருகின்றார். ஆனால் அவரது நிர்வாகிகள் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை முதலில் திருத்துவதற்கு பாடுபடுங்கள் அதன் பின்னர் நாட்டை ஆள்வதற்கு போட்டியிடுங்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.