உயிரை பறித்த தி.மு.க.வின் கொடி.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.!
உயிரை பறித்த தி.மு.க.வின் கொடி.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.!
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மிக தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 19ம் தேதி எடப்பாடி தொகுதியிலிருந்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அதே போன்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது மகனை பிரச்சாரத்திற்கு அனுப்பினார். உதயநிதி செல்லும் இடங்களில் சொல்கின்ற அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.
அதே நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில், பரமக்குடி அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை கட்ட முயன்போது, மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் 37, இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டத்திற்கு கட்சி கொடியை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கியதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.