மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் துரைமுருகன்.!

இன்று அவரை பரிசோதித்து பார்த்தில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.

Update: 2021-04-14 12:13 GMT

தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சாதாரண மக்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருனுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியானது.




 


இதன் பின்னர் அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு அதிகமாக இருந்ததால், சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக சமூக வலைளதளங்களில் தகவல்கள் பரவியது. இதனையடுத்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. துரைமுருகன் உடல்நிலை சீராக இருப்பதாக கூறியது.

இந்நிலையில், தற்போது துரைமுருகன் பூரண குணமடைந்துள்ளார். இன்று அவரை பரிசோதித்து பார்த்தில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும், அவர் வீட்டில் 15 நாட்கள் தனிமையில் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.

Similar News