மத்திய அமைச்சர் வருகை எதிரொலி.. அதிமுக இன்று அவசர ஆலோசனை எதற்காக?..
மத்திய அமைச்சர் வருகை எதிரொலி.. அதிமுக இன்று அவசர ஆலோசனை எதற்காக?..
அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிக்கான பொறுப்பாளர்களை நியமனம் செய்து தீவிரமாக களத்தில் வேலை பார்த்து வருவதை காணமுடிகிறது.
அந்த வரிசையில் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உள்ளிட்டவைகளை அறிவித்துள்ள அதிமுக, அக்கட்சியின் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். தேர்தலை முன்னிட்டு வியூகம் மற்றும் கூட்டணி குறித்து, இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருவதற்கு முந்தைய நாள், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இப்போதிலிருந்தே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.