மின்சாரத்துறையில் ஊழல் ஆதாரத்தை கேட்ட செந்தில் பாலாஜி: சில மணி நேரங்களில் ஆதாரத்தை வெளியிட்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
மின்சாரத்துறையில் ஊழல் நடைபெறும் ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று அத்துறையை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய நிலையில், சில மணி நேரங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் ஆதாரத்தை வெளியிட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.;
மின்சாரத்துறையில் ஊழல் நடைபெறும் ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று அத்துறையை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய நிலையில், சில மணி நேரங்களில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஊழல் ஆதாரத்தை வெளியிட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நேற்று சென்னையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது திமுகவை சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார். மின்சாரத்துறையில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற உள்ளது. அதற்காக தனியாரில் மின்சாரத்தை அதிகமான விலைக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதனால் திமுகவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மக்கள் மீது நிதிச்சுமை அதிகரிப்பது மட்டுமின்றி மின்சாரத்துறைக்கும் பேரிழப்பு ஏற்படும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டும் என்றே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் ஊழல் குற்றச்சாட்டை 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என கெடு விதித்திருந்தார். அவர் கெடு விதித்த சில மணி நேரங்களிலேயே பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் ஆதாரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்த ரூ.29.64 கோடியில் 4 சதவீதம் கமிஷன் அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் சொல்வாரா என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது திமுக அரசு பதவியேற்ற குறைந்த மாதங்களிலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக தெரியவந்துள்ள சம்பவம் தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.
Source: Tn Bjp President Annamalai
Image Courtesy: Samayam