பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பெயருக்கு களங்கம் விளைவிக்க பிபிசி செய்தி போன்று போலியான செய்தி படம்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது போன்று பிபிசி தமிழ் செய்தியில் போலியான போஸ்ட் கார்டு ஒன்றை சிலர் பரப்பி விட்டுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது போன்று பிபிசி தமிழ் செய்தியில் போலியான போஸ்ட் கார்டு ஒன்றை சிலர் பரப்பி விட்டுள்ளனர்.
தமிழகத்தில் பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அண்ணாமலை மீது பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்து வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே அவர் பேசியது போன்ற பொய்யான தகவல்களை சமூக வலைதளம் வாயிலாக பரப்பி வருகின்றனர். அதே போன்று மற்ற செய்தி நிறுவனங்கள் போன்று போஸ்ட் கார்டில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது போன்று பரப்பி விடுகின்றனர். இதற்காக ஏற்கனவே அவர் தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தனது கண்டனத்தை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் அண்ணாமலை பேசியது போன்று பிபிசி செய்தி போன்று போலியான செய்தியை பரப்பியுள்ளனர். அதாவது சுதந்திரத்திற்கு போராடிய தமிழர்களை விட வட இந்தியர்களைத்தான் உலகம் அறியும். வடஇந்தியர்களின் தியாகத்தை தமிழர்கள் போற்றி வணங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது கிடையாது. மத்திய பாஜக மீது வெறுப்பு காரணமாக தமிழக எதிர்க்கட்சிகள் பரப்பி விடுகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
Source, Image Courtesy: Twiter