முன்னாள் காங்கிரஸ் பிரமுகர், சிவாஜி கணேசனின் மகன் பாஜகவில் இணைகிறார்கள்.!
முன்னாள் காங்கிரஸ் பிரமுகர், சிவாஜி கணேசனின் மகன் பாஜகவில் இணைகிறார்கள்.!;
சென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்டோர் நாளை பாஜகவில் இணைகிறார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறி வருகின்றனர். அதே போன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியை விட்டு விலகினார்.
சில மாதங்களாக எந்த கட்சியிலும் சேராமல் இருந்து வந்த நிலையில், தற்போது பாஜகவில் இணைகிறார். மேலும், நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரும் பாஜகவில் இணைகிறார்.
இவர்கள் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்கின்றனர். இரண்டு முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.