அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையும் திமுக முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம்.!

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையும் திமுக முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம்.!

Update: 2020-11-21 06:34 GMT

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இவர் திமுகவில் விவசாய அணி மாநில செயலாளராக இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். கருணாநிதியை போன்று கட்சியை வழி நடத்த ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றும் தன்னை முன்னிலைப்படுத்தக்கொள்ள நாடக அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின் என்று கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினார். 


மேலும் திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து கட்சித் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் ராமலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், கே.பி.ராமலிங்கம் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக இவர் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உரையாற்றியதால் அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Similar News