தேர்தல் பணி செய்யவிடாமல் தடுக்கவே ரெய்டு ! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிமுகவினரை வேலை செய்யவிடாமல் தடுப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர், திருப்பத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் வேலை செய்யவிடாமல் அதிமுகவினரை தடுப்பதற்காக ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதாக பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courteys: Puthiyathalamurai