"வீட்ல உக்காந்து நொட்டம் சொல்லாம, வெளிய வந்து மக்களுக்கு உதவுங்க" என  திருமாவளவனை வெளுத்து வாங்கும் காயத்ரி ரகுராம்.!

"வீட்ல உக்காந்து நொட்டம் சொல்லாம, வெளிய வந்து மக்களுக்கு உதவுங்க" என  திருமாவளவனை வெளுத்து வாங்கும் காயத்ரி ரகுராம்.!

Update: 2020-11-25 17:53 GMT

"நிவர்" புயலின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து அரசியல் தலைவர்களும் கட்சி வேறுபாடு பார்க்காமல் களத்தில் இறங்கி வேலை செய்யும் நிலையில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் என வானிலை நிபுணர்களால் கணிக்கப்பட்ட கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதியில் என் நடவடிக்கை எடுத்தீர்கள் என அந்ந தொகுதியின் எம்.பி.திருமாவளவனிடம் பா.ஜ.க'வின் காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று "நிவர்" புயலினால் தமிழகம் பயம் கலந்த பதட்டத்தில் இருக்கும் போது அதன் அதீத பாதிப்பாக கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதிகள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஆனால் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று இன்று எம்.பி'யாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் அந்த தொகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் செய்யாமல் வெறும் இரண்டு பக்க அளவில் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கூட ஆளும் அரசை குறை கூறியுள்ளார். 


இதனை சுட்டிக்காட்டிய பா.ஜ.க'வின் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், "கடலூரில் எம்.பியாக இருந்து நீங்கள் என்ன செய்தீர்கள், வெற்று அறிக்கைகள் விடுப்பதை விட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய பாருங்கள்" என திருமாவளவனை #LazyThiruma என குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கம் போல் திருமாவளவனும் யாரையோ கேட்பது போல் அமைதியாக உள்ளார்.

Similar News