"கைக்கு கிளவுசு, கூலிங்கிளாசு, டிப்டாப் ஆசாமியாக வலம் வரும் ஸ்டாலின்!" முதல்வரின் மூக்குடைப்பு பதிலடி!
"கைக்கு கிளவுசு, கூலிங்கிளாசு, டிப்டாப் ஆசாமியாக வலம் வரும் ஸ்டாலின்!" முதல்வரின் மூக்குடைப்பு பதிலடி!
கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியா, தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவியது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவற்கு அம்மாவின் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து இன்று கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் கேரளாவை பாருங்கள், டெல்லியை பாருங்கள் அங்கெல்லாம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டினார். ஆனால் இன்று நிலை என்ன. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 8,000 நபர்கள் முதல் 10,000 நபர்கள் வரை இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படுகின்றார்கள். அங்கிருக்கும் மக்கள் தொகை தமிழகத்தை ஒப்பிடும்போது பாதி தான்.
டெல்லி ஒரு சிறிய மாநிலம் அந்த மாநிலத்தில் ஒரு நாளைக்கு 5,000 நபர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று ஆயிரத்திற்கும் கீழ் உள்ளது. உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர், மத்திய அரசு, மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்ற ஆலோசனைகளை முழுமையாக கடைபிடித்து நடவடிக்கை எடுத்த காரணத்தினால் தான் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.
பாரத பிரதமருடன் காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாரத பிரதமர் உரையாற்றும்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோய் மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனையே அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பாராட்டினார்.
ஒரு நாளைக்கு 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே மிக அதிக அளவில் ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் செய்யப்பட்டு கொரோனா தொற்று நோய் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அம்மாவின் அரசு எந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.