ஜி.எஸ்.டி எங்கள் கொள்கைக்கு எதிரானது ! - பொங்கும் திருமாவளவன் !
Breaking News.;
"விடுதலை சிறுத்தைகள் கொள்கை அடிப்படையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்காது" என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. அதில் சென்னையில் பங்கேற்ற திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஜி.எஸ்.டி வரி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, "ஜி.எஸ்.டி வரி விதிப்பு கூடாது, மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் தாதாயிசத்தை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது, தமிழகத்துக்கு வர வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய்களை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை, எனவே விடுதலை சிறுத்தைகள் கொள்கை அடிப்படையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்காது" என தெரிவித்தார்.