குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சி முழுவதையும் கைப்பற்றும் பாஜக.!
குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சி முழுவதையும் கைப்பற்றும் பாஜக.!
குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 6 மாநகராட்சிகளையும் கைப்பற்றும் நிலையில் பாஜக உள்ளது.
குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் கடந்த 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இனை அனைத்துமே பல ஆண்டுகளாக பாஜக வசமே இருந்து வருகிறது. மொத்த 6 மாநகராட்சிகளிலும் சேர்த்து 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இது மட்டுமின்றி ஜூனாகத் மாநகராட்சியில் 2 இடங்களுக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 9 பேர் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது.
இந்நிலையில், காலை 7 மணிக்கு தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே ஆளும் பாஜக பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை பெற்று வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள 6 மாநகராட்சிகளையும் கைபற்றும் சூழலில் அக்கட்சியின் வாக்கு எண்ணிக்கை தெரிவிக்கிறது.
விரைவில் அதிகாரப்பூர்வமாக இன்று இரவுக்குள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநிலத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 236 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 49 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.