தி.மு.க-வுக்கு வேட்டு! அழகிரியின் ஹிட் லிஸ்ட்! கலைஞர் தி.மு.க தொடங்க ஒட்டுமொத்த அழகிரி குடும்பமும் இப்போதே தீவிரம்!
தி.மு.க-வுக்கு வேட்டு! அழகிரியின் ஹிட் லிஸ்ட்! கலைஞர் தி.மு.க தொடங்க ஒட்டுமொத்த அழகிரி குடும்பமும் இப்போதே தீவிரம்!
மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது தாயார் தயாளுஅம்மாளை கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த போது, சட்டப்பேரவை தேர்தல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, ஜனவரி 3ம் தேதி ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்துவதாக கூறியுள்ளார்.
மேலும், திமுகவுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை. திமுக தலைமையிடம் இருந்து எந்த அழைப்பும் இதுவரை வரவில்லை. ரஜினி சென்னை வந்தவுடன் கண்டிப்பாக அவரை சென்று சந்திப்பேன். ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவு எடுப்பேன். ஆதரவாளர்கள் சொன்னால் புதிய கட்சித் தொடங்குவேன். எனக் கூறினார்.
ஒரு வேளை இவர் கட்சி தொடங்கினால் தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட வாக்குகளை பெறுவார் என கூறப்படுகிறது. அப்படி ஆரம்பிக்கப்பட்டால் பாதிப்பு திமுகவிற்கு மட்டுமே என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அழகிரியின் முதல் இலக்கே தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றிக்கு வேட்டு வைப்பதுதான். இதற்கான வேலைகளில் ஒட்டுமொத்த அழகிரி குடும்பமும் இப்போதே தீவிரமாக இறங்கிவிட்டது என்கின்றன மதுரை வட்டாரங்கள்.
தென் மாவட்டங்களில் திமுகவுக்கு கிடைக்கக் கூடிய தொகுதிகளில் வாக்குகளை பிரிப்பதுதான் அழகிரி கட்சியின் புதிய அஜெண்டாவாக இருக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, அவரது மகன் செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடப் போகும் தொகுதிகள் அழகிரியின் பார்வையில் முக்கியமானதாக இருக்கின்றனவாம்.
தென்மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை அள்ள, புதிய தமிழகம் பெரியசாமி உட்பட பல முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களுடன் அழகிரி தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சொந்த குடும்பத்தினரே வெறுக்கும் கட்சியாக திமுக உருவெடுத்தது அக்கட்சி தொண்டர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.