சென்னை வந்தடைந்தேன்.. தமிழில் ட்விட் போட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா.!
சென்னை வந்தடைந்தேன்.. தமிழில் ட்விட் போட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா.!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கே.பி.அன்பழகன், மாஃபா பாண்டியராஜன் உட்பட பலர் இருந்தனர். மேலும், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, மற்றும் நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று வரவேற்றனர்.
இதனிடையே விமான நிலையத்திற்கு வெளியே மேளத்தாளங்களுடன் பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அமித்ஷா, அவர்களை பார்த்து கையசைத்து சென்றார்.
மேலும், ஓட்டல் சென்று கொண்டிருந்போது காரை விட்டு கீழே இறங்கி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் தொண்டர்கள் அனைவரும் அமித்ஷா ஜி, அரசியல் சாணக்கியனே வருக வருக என கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட் செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது: தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.