ஜெயலலிதா நினைவிடத்தை குண்டு வைத்து தகர்ப்பேன்.. மிரட்டலால் அதிர்ந்து போன போலீஸ்.!
ஜெயலலிதா நினைவிடத்தை குண்டு வைத்து தகர்ப்பேன்.. மிரட்டலால் அதிர்ந்து போன போலீஸ்.!;
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை குண்டு வீசி தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்துள்ள இளைஞரால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக ரூ.80 கோடி செலவில் தமிழக அரசு பிரமாண்டமான முறையில் நினைவிடம் கட்டியுள்ளது. இந்த நினைவிடம் சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர். இதனையடுத்து பராமரிப்பு பணி நடைபெறுவதால் நினைவிடத்தை தற்காலிமாக பொதுப்பணித்துறை மூடியுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்கப்போவதாக இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து, மிரட்டல் விடுத்த கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.