கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார் இல.கணேசன்!

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கட்சியில் உள்ள பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்.;

Update: 2021-08-23 09:07 GMT
கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார் இல.கணேசன்!

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கட்சியில் உள்ள பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து ஆளுநராக பதவியேற்கும் அவர் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. ஆகவே அவர் தனது கட்சி பொறுப்புகள் அனைத்தையும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: Topnews

https://www.toptamilnews.com/ila-ganesan-resigns-from-bjp/

Tags:    

Similar News