ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கியதை ஆஸ்கர் விருது போல மகிழ்ச்சி அடைகிறேன்: அண்ணாமலை!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சி நிர்வாகிகள் ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கியுள்ளனர். இது தனக்கு ஆஸ்கர் விருது வழங்கியதை போல மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.;
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சி நிர்வாகிகள் ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கியுள்ளனர். இது தனக்கு ஆஸ்கர் விருது வழங்கியதை போல மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாஜக சார்பில் போட்டியிடும் ஒன்றிய குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். இதனிடையே ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவருக்கு நிர்வாகிகள் ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: சென்னிமலை தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் எனக்கு ஒரு ஆட்டுகுட்டியை பரிசாக தந்திருக்கிறார்கள். ஆஸ்கர் விருது போல மகிழ்ச்சி, அதிலும் கொங்கு மண்டலத்தின் வேளாண் சின்னமாக, நம் பண்பாட்டின் விழுமியமாக நான் ஆட்டுக்குட்டியை பார்க்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Tn Bjp Presedient Annamalai