தி.மு.க நிர்வாகியால் பலாத்காரம் செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்காத சசிகலா குடும்பத்தினர்.

Even after one year injustice has been continuing for the Demised Sasikala

Update: 2021-07-29 15:30 GMT

கடந்த ஆண்டு தி.மு.க நிர்வாகிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தற்கொலைக்கு தூண்டப்பட்ட செய்யூரை சேர்ந்த சசிகலா இறந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் நீதி கிடைக்காதது அவரது குடும்பத்தாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த நயினார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண் கடந்த ஆண்டு ஜூன் 24'ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. சசிகலாவின் பெரியப்பா மகன்களான தி.மு.க நிர்வாகிகள் புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர் சசிகலாவின் திருமணத்திற்கு தடை ஏற்படுத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் சகோதரி முறையான சசிகலாவை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சசிகலா வீட்டில் தனியாக இருந்தபோது  அங்கு சென்ற புருஷோத்தமன் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகம் ஆடுவதாக சசிகலாவின் தாயார் மற்றும் சகோதரர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோரை மிகுந்த சிரமத்திற்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன் பிறகு அந்த இரு பாலியல் குற்றவாளிகளுக்கும் தகுந்த தண்டனை கிடைக்கவில்லை, அதன் வழக்கு இன்னமும் நடந்துகொண்டு தான்  இருக்கிறது. இந்நிலையில் சசிகலா இறந்து தற்பொழுது ஒரு வருட காலம் ஆகிறது. ஆனால் அவர் மரணத்திற்கு காரணமான தி.மு.க நிர்வாகிகள் புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர்க்கு தண்டனை கிடைக்கவில்லை என சசிகலாவை பரிதாபமாக பலி கொடுத்த அவரது குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

தி.மு.க'வில் உள்ள தலைவர்கள் கூட இந்த விஷயத்திற்கு கருத்து கூட வெளியிடவில்லை, ஏன் எங்கோ நடந்த ஹாத்ரா பாலியல் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி போராடிய கனிமொழி கூட இந்த விவகாரம் தொடர்பாக மூச்சு கூட விடாமல் உள்ளார். காரணமே சசிகலா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தி.மு.க நிர்வாகிகள் என்பதால். நீதி கிடைக்குமா என சசிகலா குடும்பத்தினர் மன வேதனையுடன் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News