கட்சியின் நிறுவனருக்கே இந்த நிலைமையா.. ராமதாஸை பார்த்து கண்ணீர் விடும் முன்னாள் எம்.எல்.ஏ.!

கட்சியின் நிறுவனருக்கே இந்த நிலைமையா.. ராமதாஸை பார்த்து கண்ணீர் விடும் முன்னாள் எம்.எல்.ஏ.!

Update: 2021-02-05 16:20 GMT

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த சில நாட்களாகவே மிகவும் சோகமான ட்வீட்களை போடுவதை பார்க்க முடிகிறது. அரசு வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசு அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அது மட்டுமின்றி தேர்தல் நெருங்கி வரும் வேளைகளில் பல்வேறு சட்டச்சிக்கல்கள் இருப்பதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: தருமபுரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுச்சாமி சற்று முன் என்னிடம் பேச வேண்டும் என்று கூறினார். நானும் என்னப்பா? என்று கேட்டேன்.

‘‘அய்யா நாங்களெல்லாம் இந்தியாவின் இரும்பு மனிதர் மருத்துவர் அய்யா வாழ்க என்று அப்போது முழக்கமிடுவோம். ஆனால், இப்போது உங்கள் ட்விட்டர் பதிவைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறோம்” என்றார் அவர். இவ்வாறு ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே ராமதாஸ் போடும் ட்விட்டை பார்த்து பாமகவினர் சோகமடைந்துள்ளனர். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வெற்றிபெறவில்லை என்ற வெளிப்பாடா இருக்குமோ என்று எல்லாம் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றதை பார்க்க முடிகிறது.
 

Similar News