ஜெயலலிதா பிறந்தநாள்.. தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
ஜெயலலிதா பிறந்தநாள்.. தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழா இன்று அதிமுகவின் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடினார். இதே போன்று சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயயலிதா உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு தீபம் ஏற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதே போன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் தீபம் ஏற்றி ‘அதிமுகவைக் காப்போம்’ என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.