மகனை மீட்க உலகின் அனைத்து கதவுகளையும் தட்டிவிட்டார்.. பேரறிவாளன் தாயிக்கு ஆதரவாக கமல்ஹாசன் ட்வீட்.!
உலகில் உள்ள அனைத்து கதவுகளையும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தட்டிவிட்டார் என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் உள்ள அனைத்து கதவுகளையும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தட்டிவிட்டார் என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் அனைத்து வகையிலான சட்டப்போராட்டங்களை செய்து வருகிறார். ஆனால் அவர் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.
அற்புதம்மாளுக்காக பலரும் ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே போன்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் தற்போது குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: "மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? என்று குறிப்பிட்டுள்ளார்.