காபி கடையில் காசு குடுத்த கனிமொழி - தி.மு.கவின் புது பழக்கம்!
காபி கடையில் காசு குடுத்த கனிமொழி - தி.மு.கவின் புது பழக்கம்!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வோரு புகழ்பெற்ற நினைவுகளால் மக்களிடையே நினைவு கூறப்படும். அ.தி.மு.க என்றால் சத்துணவு திட்டம், அம்மா உணவகம் என்ற திட்டங்களும், பா.ஜ.க என்றால் ரத யாத்திரை, வேல் யாத்திரை போன்ற யாத்திரைகளும் சமீபகாலமாக கிராமப்புறங்களில் "மோடி வீடு" என்றழைக்கப்படும் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் வழங்கும் திட்டம் போன்றவைகளும், பா.ம.க என்றால் புகை பிடித்தல், மதுபான கடை தொடர்பான பொது நல வழக்குகள் மக்களின் நினைவுக்கு வரும்.
ஆனால் கடையில் பொருள் வாங்கிவிட்டு பணம் குடுக்காமல் செல்வது, நில அபகரிப்பு என்றால் உடனே மக்களின் ஞாபகத்திற்கு வருவது தி.மு.க மட்டுமே. ஏனென்றால் பொதுவெளியில் தி.மு.க'வினரின் வரலாறு அப்படி. டீ கடையில், தோசை ஓட்டலில், பிரியாணி கடையில், பஜ்ஜி கடையில் என தி.மு.க'வினர் அராஜகம் செய்து செய்திகளில் வராத இடங்களே இல்லை எனலாம். அப்படி ஆகிவிட்டது தி.மு.க'வின் வரலாறு மக்கள் மத்தியில்.
ஆனால் இன்று கனிமொழி அவர்களின் தேர்தல் பரப்புரையில் ராதாபுரத்தில் ஒரு தேநீர் கடையில் காபி அருந்திவிட்டு அந்த கடையின் பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் தி.மு.க'வின் மகளிரணி தலைவி கனிமொழி. அதனை தனது ட்விட்டர் கணக்கிலும் பதிவிட்டுள்ளார். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் கடையில் காபி அருந்திவிட்டு அவர் கடைக்கு பணம் கொடுப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டதுதான்.
அதாவது தேர்தல் பரப்புரையில் அரசியல்வாதிகள் மக்களுடன் மக்களாக இருப்பது போன்று புகைப்படங்களை பகிர்வது வாடிக்கையான ஒன்றுதான். இதில் மாற்று கருத்து ஏதுமில்லை. ஆனால் தி.மு.க'விற்கு கடையில் காசு கொடுக்கமாட்டார்கள் என்ற வரலாறு இருப்பதாலும், "எங்கே இந்த கடையிலாவது காசு குடுத்தீர்களா?" என்ற கேள்வி வந்துவிட கூடாது என்றும் கனிமொழி காசு கொடுத்தது மட்டுமின்றி அதை படம் பிடித்து ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார்.