தோளில் கை போட்ட நிர்வாகிக்கு கன்னத்தில் 'பளார்' விட்ட காங்கிரஸ் தலைவர்.!
தோள் மீது கை போட்டதுக்கே அடிப்பதா என அம்மாநில பாஜக நிர்வாகிகள் மற்றும் மஜத கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மீது நிர்வாகி ஒருவர் தோள் மீது கை போட்டதுக்கு கன்னத்தில் பளார் விட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில முன்னாள் அமைச்சராக இருந்தவர் டி.கே.சிவகுமார். இவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியில் உள்ளார். ஆனால் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் சற்றும் கோபமாகவே நடந்து கொள்வார்.
அதே போன்று இன்று ஒரு நிகழச்சி ஒன்றுக்காக சென்ற டி.கே.சிவக்குமார் மீது ஒரு காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தோள் மீது கை போட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அவர் கன்னத்தில் பளார் என அறை விட்டார். இதனால் அந்த கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தோள் மீது கை போட்டதுக்கே அடிப்பதா என அம்மாநில பாஜக நிர்வாகிகள் மற்றும் மஜத கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.