கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா.!

கர்நாடகா முதலமைச்சராக கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி எடியூரப்பா 4வது முறையாக பதவியேற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் ஓய்வு அளிக்கப்படுவது வழக்கம்.

Update: 2021-07-26 07:17 GMT

கர்நாடகா முதலமைச்சராக கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி எடியூரப்பா 4வது முறையாக பதவியேற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் ஓய்வு அளிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்தியது. அப்போது 2 ஆண்டுகள் முடிந்தபின்னர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை எடியூரப்பா ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன்படி தனது முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். இதனை முறைப்படி ஆளுநரை சந்தித்து கடிதம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

Similar News