எழுதி குடுத்து பேசுகிறார்.. மாலையில் பிக்பாஸில் நடிக்கிறார்.. கமல் பற்றி அமைச்சர் என்ன சொல்கிறார்.?

எழுதி குடுத்து பேசுகிறார்.. மாலையில் பிக்பாஸில் நடிக்கிறார்.. கமல் பற்றி அமைச்சர் என்ன சொல்கிறார்.?

Update: 2020-11-17 18:17 GMT

நடிகர் கமல், தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் 4வது சீசனில் தற்போது நடித்து வருகிறார். அவர் தமிழக அரசை பற்றி அவ்வப்போது எதாவது கருத்துகளை முன் வைப்பார். அதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை பெய்தது. அப்போது புதியதாக விடப்பட்ட அரசு பேருந்தில் தண்ணீர் ஒழுகியதாக தெரிகிறது. இதனால் பயணி ஒருவர் குடை படித்து சென்ற புகைப்படம் வெளியானது.

இது பற்றி கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா? இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மதுரை பைபாஸ் சாலை அருகே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, கமலஹாசன் அரசியலைப் படப்பிடிப்புத் தளமாக நினைத்துக் கொண்டுள்ளார். இப்போதெல்லாம் மழை பெய்தால் அதிகமாகப் பெய்வதாகவும், வெயில் அடித்தால் அதிகமாக அடிப்பது போலவும் பருவச் சூழல் மாறி உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கமலஹாசன் யாரோ எழுதிக்கொடுத்ததை காலையில் பேசிவிட்டு மாலையில் பிக்பாஸில் நடித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Similar News