ரயில்வே தேர்வில் முறைகேவு - லாலு பிரசாத் மகள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை!
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது ரயில்வேத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. அது மட்டுமின்றி ரயில்வே பணியில் சேருவதற்கு முயற்சி செய்தவர்களிடம் நிலத்தை அபகரித்தாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் புதிய லஞ்ச வழக்கு ஒன்றையும் பதிவு செய்து விசராணை நடத்தி வந்தனர். அதே நேரத்தில் லாலு பிரசாத்தின் மகளான மிசா பாரதி மீதும் போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். முறைப்படி சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
இந்நிலையில், புதிய வழக்கு தொடர்பாக லாலுபிரசாத் யாதவ் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன்படி பீகாரில் உள்ள லாலு பிரசாத் யாதவ் வீடு, அவரது மகள் மிசாபாரதி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை நிறைவு பெற்றபோது பல்வேறு தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Source: Malaimalar
Image Courtesy: India.Com