தி.மு.க.வால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது: நிலஅபகரிப்பு, அராஜகம் அதிகரித்துவிட்டது! ஆளுநரிடம் பா.ஜ.க. தலைவர் புகார்!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று மாலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து சட்டம், ஒழுங்கு பற்றி பேசினார்.;
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று மாலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து சட்டம், ஒழுங்கு பற்றி பேசினார்.
இதன் பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. கொலைகள் நடந்து வருகிறது. திருநெல்வேலி திமுக எம்.பி. பாஜக தொண்டரை அடித்தது மட்டுமின்றி பொதுமக்கள் முன்னிலையில் சிசிடிவி கேமராவையும் பறித்து சென்றுள்ளார்.
மேலும் கடலூர் திமுக எம்.பி. தன்னுடைய தொழிற்சாலையில் வேலை பார்த்த ஊழியரை அடித்து கொன்றதில் நேரடியாக அவரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்றார். எனவே அவர்கள் மீது நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இதனை ஆளுநர் கண்காணிக்க வேண்டும் ,எனவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நில ஆக்கிரமிப்பு, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனை ஆளுநர் ஆரம்பத்திலேயே சரிசெய்து எச்சரிக்கைவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar
Image Courtesy: Bjp Twiter