ஏ.கே.47 வைத்து தீர்த்துக்கட்டுவோம்.. ஆடிப்போன ஒடிசா முதலமைச்சர்.!

ஏ.கே.47 வைத்து தீர்த்துக்கட்டுவோம்.. ஆடிப்போன ஒடிசா முதலமைச்சர்.!

Update: 2021-01-08 16:46 GMT

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு ஆபத்து உள்ளது என மர்ம கடிதம் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அலுவலகத்துக்கு முகவரி இன்றி ஒரு மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது: முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உயிருக்கு மிகவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரை ஒப்பந்த கொலையாளிகள் எந்த நேரத்திலும் தாக்க நேரிடும். அந்த படையினர் முதலமைச்சரை பின் தொடர்ந்து வருகிறார்கள்.

தயவுசெய்து இது பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் ஏ.கே. 47 மற்றும் தானியங்கி துப்பாக்கிகளை வைத்து சுடப்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் காரில் தயாராக வைத்திருப்பதாகவும், அந்த கார்களின் எண்களும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த கடிதம் தொடர்பாக டி.ஜி.பி., புலனாய்வுத்துறை இயக்குநர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு கடிதம் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கேள்வி பட்டதும் முதலமைச்சர் பட்நாயக் ஆடிபோயுள்ளாராம். எதற்காக இது போன்ற கடிதம் தனக்கு வரவேண்டும் என புலம்பியதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல்கள் கூறுகின்றன.

Similar News