சசிகலாவிற்காக ஓசூரில் தயாராகும் சொகுசு ஓட்டல்.. உளவுத்துறை போலீசார் தகவல்.!

சசிகலாவிற்காக ஓசூரில் தயாராகும் சொகுசு ஓட்டல்.. உளவுத்துறை போலீசார் தகவல்.!

Update: 2021-01-12 18:39 GMT

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையை பெங்களூரு நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலா இருந்தபோது விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் அவர் முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என்று சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார். இதனால் வருகிற 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியானது. விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் வரவேற்பு அளிக்க அமமுக கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

தமிழக எல்லைக்கு வருவதற்கே இரவு நேரம் ஆகும் என்பதால், அவர் சென்னைக்கு செல்லாமல் ஓசூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் ஓட்டல்களை பார்வையிட்டு முன்பதிவு செய்து விட்டதாக உளவு பிரிவு போலீசார் அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.

மேலும் சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் வரவேற்பு அளிக்க செல்லும் அமமுமக நிர்வாகிகள் தங்கவும் ஓசூரிலுள்ள பிரபல ஓட்டல்களை புக்கிங் செய்துள்ளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Similar News