முக்கிய அமைச்சர் ராஜினாமா.. அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி.. வீழ்ச்சி ஆரம்பமா?
முக்கிய அமைச்சர் ராஜினாமா.. அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி.. வீழ்ச்சி ஆரம்பமா?
மேற்கு வங்காளத்தை ஆட்சி புரிந்துவரும் திரிணாமுல் காங்கிரஸிற்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அம்மாநிலத்தின் போக்குவரத்துறை அமைச்சர் சுவேந்து ஆதிகாரி, அம்மாநில அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ஆதிகாரியின் ராஜினாமா கடிதம் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் வங்காள ஆளுநர் இருவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "இன்று மதியம் 1:05ற்கு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்ட திரு.ஆதிகாரியின் ராஜினாமா கடிதம் எனக்கும் வந்து சேர்ந்தது. இந்த விவகாரம் அரசியலமைப்பு ரீதியாகக் கையாளப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
Today at 1:05 pm a resignation letter of Mr. Suvendu Adhikari from office as minister addressed to Hon’ble Chief Minister has been forwarded to me.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 27, 2020
The issue will be addressed from constitutional perspective. pic.twitter.com/cxjF68uomH
வியாழக்கிழமையன்று சுவேந்து ஆதிகாரி ஹூக்ளி நதி பால ஆணையர்களின் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பிருந்து திரிணாமுல் கட்சியில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள தொடங்கினார். அப்போதிருந்து அமைச்சர் பதவியை அவர் நிர்வாகிக்கவில்லை.
சுவேந்து ஆதிகாரி, அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை சுசில் மற்றும் சகோதரர் திபெந்து இருவருமே மக்களவை எம்பிக்கள். திரிணாமுல் காங்கிரஸில், மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் செல்வாக்கு வளர தொடங்கியதிலிருந்து, தான் ஓரங்கட்டப்படுவதாகக் கருதிய ஆதிகாரி, தற்பொழுது அமைச்சர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.
ஆதிகாரி குடும்பம், மம்தா பானர்ஜியின் முக்கியமான நந்திகிராம் போராட்டத்தின்போது தங்களது ஆதரவை வழங்கினர். தெற்கு வங்காளத்தின் மிட்னாபூர் பகுதிகளில் மம்தா பானர்ஜியின் வெற்றிக்கு இவர்கள் முக்கிய காரணியாக கருதப்படுகிறார்கள்.