5000 ரூபாயில் கல்யாணம், 5 பைசா.. 10 பைசா பேரம்.. 1970 -களில் வாழ்கிறாரா மு.க.ஸ்டாலின்.?

5000 ரூபாயில் கல்யாணம், 5 பைசா.. 10 பைசா பேரம்.. 1970 -களில் வாழ்கிறாரா மு.க.ஸ்டாலின்.?

Update: 2020-12-31 21:10 GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் அக்கட்சி தொண்டர்களை வாட்டி வதைக்கும் காட்சிகள் தினமும் அரங்கேறும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிராம சபைக்கூட்டம் என்று திமுகவால் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரு ஊரில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் ரூ.2500 கூட சேர்த்து 1500 அளித்தால், ரூ.5,000 வந்து விடுகிறது என்று கணக்கை தவறாக உச்சரித்தார்.

இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சாதாரணம் ஒன்றாம் வகுப்பு மாணவன் போடும் கணக்கு கூட தெரியலை என்று வேதனையுடன் கழக உடன் பிறப்புகள் பேசுவதை காண முடிந்தது.

இந்நிலையில், மீண்டும் இன்று நேற்றைய ஒரு சம்பவம் போன்று அரங்கேறியுள்ளது. இன்று ராணிப்பேட்டை மாவட்டம், அனந்தலை என்ற இடத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் 1970ம் வருடத்தில் வாழ்ந்த மக்கள் போன்று பேசிய சம்பவம் 90 கிட்ஸ்களை எரிச்சலடைய செய்தது என்றே சொல்லலாம்.

அதாவது உங்க வீட்டுக்கு ஒரு பொருள் வாங்குறீங்க, கடைக்கு போயிட்டு கத்தரிக்காய், வெண்டைக்காய் அல்லது எது வாங்கினாலும் கடைக்காரரிடம் கொஞ்சம் பேரம் பேசித்தான் வாங்குவோம். அப்போது 5 பைசா, 10 பைசா, 20 பைசா குறைச்சி கேட்டுத்தான் வாங்குவோம்.

இவர் பேசுவதை கேட்ட 80, 90 கிட்ஸ் தொண்டர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்புவதையும் காண முடிந்தது. மேலும், 5000 ரூபாயில் கல்யாணமும் ஆயிடும் என்று கூறினார். இன்னும் தலைவரு 1970 காலத்திலேயே இருக்கிறாரே. தற்போது 2020 முடிஞ்சி 2021ம் ஆண்டே வந்துடுச்சே இன்னும் தலைவரு அப்டேட் ஆகலையே என்று புலம்பியதைதான் காண முடிந்தது.

இவரை தமிழக முதலமைச்சரா ஆக்கினால் ஒட்டு மொத்த தமிழகமும் பண்டைய காலத்திற்கே சென்றுவிடும் என்பது அனைத்து மக்களின் ஒட்டு மொத்த குரலாகும்.

Similar News