சசிகலாதான் ஆலோசனை வழங்கினாரா.. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கடும் கண்டனம்.!
நான் சொல்லும் அனைத்து கருத்துக்களையும் எம்.ஜி.ஆர். மிகவும் பொறுமையாக கேட்பார். இது பலருக்கு தெரியாது என கூறியுள்ளார். சசிகலாவின் இந்த பொய் பேச்சுக்கு அதிமுகவில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலின்போது அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்திருந்தார். இதன் பிறகு தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில், தான் மீண்டும் அரசியலுக்கு வருவதாக தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி தினமும் யாராவது ஒருவருக்கு போன் செய்து, தான் சசிகலா பேசுவதாகவும், மீண்டும் அதிமுகவிற்கு தலைமை ஏற்று நடத்த இருப்பதாகவும் கூறுவார். அந்த உரையாடலை பதிவு செய்து கொண்ட அவர் தொலைக்காட்சிகளுக்கு கொடுத்து ஒளிபரப்ப செய்யவார்.
அந்த வகையில், தூத்துக்குடியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் சசிகலா பேசிய ஆடியோவில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு தான் ஆலோசனை வழங்கியதாக கூறினார். கட்சி தொடர்பான பல முடிவுகள் என்னிடம் கேட்டு எடுத்திருக்கிறார் என கூறியிருந்தார்.
மேலும், நான் சொல்லும் அனைத்து கருத்துக்களையும் எம்.ஜி.ஆர். மிகவும் பொறுமையாக கேட்பார். இது பலருக்கு தெரியாது என கூறியுள்ளார். சசிகலாவின் இந்த பொய் பேச்சுக்கு அதிமுகவில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர். குறித்து பொய்யான கருத்து தெரிவித்த சசிகலாவிற்கு சமூகவலைதளங்களில் கண்டனங்கள் மற்றும் மீம்ஸ்களை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.