தாத்தா உருவாக்கிய அ.தி.மு.க.விற்கு மட்டுமே உழைப்பேன்.. எம்.ஜி.ஆர். பேரன்.!

தாத்தா உருவாக்கிய அதிமுக கட்சியை தவிர வேறு எந்த கட்சிக்காகவும் உழைக்கப் போவதில்லை என்று எம்.ஜி.ஆர். பேரன் ராமச்சந்திரன் ரவி தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-16 11:06 GMT

தாத்தா உருவாக்கிய அதிமுக கட்சியை தவிர வேறு எந்த கட்சிக்காகவும் உழைக்கப் போவதில்லை என்று எம்.ஜி.ஆர். பேரன் ராமச்சந்திரன் ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமாரின் மகன் ராமச்சந்திரன் ரவி இன்று தேனிக்கு சென்றார். அங்கு அதிமுக நிர்வாகிகள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


 



இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிபட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் விருப்பனு அளித்திருந்தேன். ஆனால் கட்சியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதனால் நான் வருத்தப்படவில்லை. கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் வெற்றிதான் முக்கியம். கட்சி நல்ல முடிவை எடுத்துள்ளது என கூறினார்.

மேலும், கட்சியை பிளவுபடாமல் கொண்டு வந்ததே பெரிய சாதனைதான். நடிகர் கமல் உள்ளிட்ட கட்சியினர் அழைப்பு விடுத்தனர். ஆனால் அதிமுக கொடி, சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் நான் இருப்பேன். கடைசி வரைக்கும் எனது தாத்தா உருவாக்கிய கட்சியில் உழைத்துக் கொண்டிருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News