சொத்துவரியை மத்திய அரசு உயர்த்த சொல்லவில்லை! தி.மு.க. மக்களிடம் பொய் சொல்லி கொள்ளையடிக்கிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
தமிழகத்தில் 10 மாதம் ஆட்சி செய்து மக்கள் பணத்தை கொள்ளையடித்து அதை எடுத்துக்கொண்டு துபாயில் முதலீடு செய்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
Live: சொத்து வரி 150% வரை உயர்த்திய திமுக அராஜக ஆட்சி முறையையும் எதிர்த்து, சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாண்புமிகு @EPSTamilnadu அவர்கள் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்#சொத்து_வரியா_சொத்தை_பறிக்கும்_வரியா https://t.co/TKY9HyHFfN
— AIADMK (@AIADMKOfficial) April 5, 2022
திமுக அரசு அமைந்த பின்னர் மக்களுக்கு பல்வேறு துன்பங்களை அளித்து வருகிறது. அதில் ஒன்றுதான் சமீபத்தில் சொத்து வரி உயர்த்தியது. இதனை எதிர்த்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போன்று திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: மத்திய அரசு வீட்டு வரியை உயர்த்த சொல்லியது என்று கூறி வருகின்றனர். மத்திய அரசு அப்படி எதுவும் செய்யவில்லை. வீண் பழியை போட்டு மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர் என்றார்.
மேலும், 10 மாதம் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அதிமுக கொண்டு வந்ததை திறந்து வைக்கின்றனர். அதிமுக பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் வைத்து வருகிறது. ஸ்டாலின் குடும்பத்துடன் துபாய் இன்ப சுற்றுலா சென்று வந்தார். அங்கு முதலீடு செய்யத்தான் சென்றார். முதலீடு கொண்டுவருவதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Twiter