நீட் தேர்வில் அரசியல் உள்நோக்கம் இல்லை: பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பேட்டி.!

இந்த குழுவுக்கு தடை விதிக்கக்கோரியும், அதனை ரத்து செய்யக் கோரியும் தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Update: 2021-06-29 08:18 GMT

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என, தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கூறியுள்ளார்.

நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.


 



இந்த குழுவுக்கு தடை விதிக்கக்கோரியும், அதனை ரத்து செய்யக் கோரியும் தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது பற்றி உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் மற்றும வழக்கறிஞர் அணி தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கரு.நாகராஜன் பேசுகையில், நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. நீட் தேர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சமூக நீதி பாதுகாக்கப்படும் என்ற அடிப்படையில் தீர்ப்பு தெளிவாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனை அவரும் எதிர்க்கவில்லை. தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்டாலும் நீட் வேண்டாம் என்று சொல்லும் ரவீந்திரநாத் கூட இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். ஆனால் அவரும் இதனை எதிர்க்கவில்லை.


 



மேலும், இந்தக் குழுவில் 85 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு கணிணியில் இருந்தே எத்தனை பேர் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். ஒருவர் கூட பல முறை தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். இது திமுகவின் குழுவா? அல்லது தமிழக அரசின் குழுவா? தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டோம் என்று ஒப்புக்கு நடிக்க இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வினால்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஏழை, எளிய மாணவர்களின் கனவை நனவாக்கும் தேர்வுதான் இது. இந்த வழக்கில் எந்த ஒரு அரசியல் உள்நோக்கமும் இல்லை. ஏழு நீதிபதிகள் ஆய்வு செய்யாமலா தீர்ப்பு வழங்கியிருப்பார்கள். இது மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றும் செயல் எனக் கூறியுள்ளார்.

Similar News