மீண்டும் ஒரு மக்கள் நலக்கூட்டணி.. சரத்குமார், கமல், பாரிவேந்தர் தலைமையில் உருவாகிறது.!
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் நலக்கூட்டணி என்று உருவாக்கி தமிழகம் முழுவதும் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட அந்த கூட்டணி வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒரு மக்கள் நலக்கூட்டணி உருவாகிறது. இதில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஜ.ஜே.கே. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சரத்குமார் தனது பொதுக்குழுவில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சரத்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதில் சரத்குமார் பேசியதாவது: மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியாகியுள்ளது. கமல்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் இது மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கும் எனவும் பேசினார்.
தற்போது சரத்குமார் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மீண்டும் ஒரு மக்கள் நலக்கூட்டணி உருவாகியது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் என்ன எல்லாம் நாடகம் அரங்கேறும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.