தி.மு.கவை வீட்டுக்கு அனுப்ப தான் இந்த நடை பயணம்.. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை..
தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இந்த நடைபயணம் தற்பொழுது இரண்டாம் கட்டங்களை அடுத்து மூன்றாம் கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெறும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருடன் மத்திய அமைச்சர் L. முருகன் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு நடை பயணம் மேற்கொண்டார்கள்.
நடைபயணத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறுகையில், "இது மக்களாட்சி நடை பயணம் கையாலாகாத திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்காக தான் நடை பயணம் வந்திருக்கிறோம். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். ஆனால் ஏழை ஜாதி இருக்கக்கூடாது என நான் கூறுகிறோம் முப்பது ஆண்டு கால லஞ்சத்தை வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மூலம் அகற்ற வேண்டும்.
பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு செய்தது பிரதமர் மோடி அரசு. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 கொடுத்தது மோடி அரசு, காப்பீடு வழங்கியது, குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஏழையிலேயே மக்களுக்காக செய்து கொண்டிருக்கிறார் நாம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். ஆனால் நமக்கு என்ன ஆதாயம் இருக்கிறது என்பதை தான் திமுகவினர் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இவ்வாறு தன்னுடைய காரசார அனல் பறக்கும் விவாதத்தை முன் வைத்தார்.
Input & Image courtesy: News