மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் மீண்டும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு! செந்தில் பாலாஜியின் பரிதாப நிலை!!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் தற்பொழுது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரை ஆய்வு செய்து பார்த்ததில் பித்தப்பையில் கல் இருப்பதாகவும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக நேற்றைய தினம் நடைபெற்ற உச்சநீதிமன்ற ஜாமீன் வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனால் அவரது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் தர வேண்டும் என்று கோரிக்கை செந்தில் பாலாஜி தரப்பில் முன்வைக்கப்பட்டது இருப்பினும் இந்த மனு மீதான விசாரணையை நம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட படியே காணொளி காட்சி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி காவலை டிசம்பர் 4 வரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
Source : News Tamil 24×7