தெலங்கானாவில் முன்னாள் முதல்வர், வருங்கால முதல்வரை தோற்கடித்த பாஜக வேட்பாளர்: யார் இந்த வெங்கட்ரமணா ரெட்டி?

Update: 2023-12-04 01:01 GMT

தெலங்கானா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 65 இடங்களையும் பிஆர்எஸ் கட்சி 38 இடங்களையும் கைப்பற்றியது. 

2018ல் ஒரு இடத்தில் வெற்றிபெற்ற பாஜ இம்முறை 8 இடங்களில் வெற்றிபெற்றது. காமாரெட்டி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக கருதப்பட்டது.

முதல்வர் சந்திரசேகர ராவ், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி அங்கு போட்டியிட்டனர். பாஜ சார்பில் வெங்கட்ரமணா ரெட்டி போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கையின் போது மூவரிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், பாஜக வேட்பாளர் வெங்கட்ரமணா ரெட்டி 66,652 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இரண்டு முறை முதல்வராக இருந்துள்ள கேசிஆர் மற்றும் வருங்கால முதல்வர் ரேவந்த் ரெட்டி இருவரையும் தோற்கடித்துள்ளார் பாஜக வேட்பாளர் வெங்கட்ரமணா ரெட்டி. 

யார் இந்த வெங்கட்ரமணா ரெட்டி?

53 வயதான ரமண ரெட்டி தொழில்அதிபர். தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, அவரது மொத்த அறிவிக்கப்பட்ட சொத்து ரூ.2.2 கோடியும் அசையும் சொத்துக்களாக ரூ.47.5 கோடியும் சேர்த்து ரூ.49.7 கோடியாக உள்ளது.  காமாரெட்டி தொகுதியானது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் கலந்த கலவையாக உள்ளது. விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் உள்ளூர் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக உள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார் வெங்கட்ரமணா ரெட்டி. 

கேசிஆர், ரேவந்த் ரெட்டி இருவரும் வெளியூர் ஆட்கள். நான் உள்ளூர் வேட்பாளர். உங்களது குறைகள் எனக்கு தான் தெரியும் என பேசினார். 

"நான் இங்கு பிறந்தேன், இங்குதான் வளர்ந்தேன், என் சாகும் வரை உங்களுடன் இருப்பேன்" என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் கூறியிருந்தார்.

தெலுங்கானா தேர்தலுக்கு பிரச்சாரத்தின் போது பேசிய வெங்கட்ரமணா ரெட்டி காமரெட்டி டிப்போவில் இருந்து கிளம்பும் பேருந்துகள் காமரெட்டியில் தங்கும் என்றும், கஜ்வெல் மற்றும் கோடங்கல் டிப்போக்களில் இருந்து கிளம்பும் பேருந்துகள் அந்தந்த டெப்போக்களுக்குச் செல்லும் என சூசகமாக கூறி இருந்தார். 

அது தேர்தலில் கை கொடுத்து, இப்போது வெற்றியை தேடி தந்துள்ளது. 

 

Similar News