திமுக அரசை வெளுத்து வாங்கிய மத்திய நிதி அமைச்சர்! கூட்டணிக்கு முக்கியத்துவம் அளித்த தமிழக முதல்வர்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளம் பெய்த பொழுது பாடம் கற்றுக் கொண்டிருந்தால் தற்போது பெய்த மழையில் வெள்ளநீர் தேங்கி இருக்காது. தமிழக அரசு அந்த வெள்ளத்தில் கற்றுக் கொண்டது தான் என்ன? மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் உள்ள கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதன் மூலமே தெளிவாகத் தெரிகிறது தமிழக முதல்வர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று!
டெல்லி செல்லும் முதல்வர் பிரதமரை இரவு சந்திப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். பகல் முழுவதும் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகு போற போக்கில் சாவகாசமாக பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார். இதில் மத்திய அரசை குறை கூறுவது நியாயமா? மேலும், திமுக குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி உன் அப்பன் வீட்டு காசா என பேசுகிறார். அவரிடம் இருக்கும் பதவியும் மற்ற அனைத்தும் அவரது அப்பன் வீட்டு காசா என கேட்க முடியுமா? இது மாதிரி பேச்சுக்கள் அரசியலில் இருப்பது நல்லதல்ல பொறுப்பில் இருப்பவர் பொறுமையுடன் பேச வேண்டும்!
தென் மாவட்டங்களை மழை தாக்குவதற்கு முன்பாகவே ரூபாய் 900 கோடியை மத்திய அரசு கொடுத்தது அந்த தொகையானது என் அப்பன் வீட்டு சொத்து என்றோ உங்கள் அப்பன் வீட்டு சொத்து என்றோ நான் சொல்ல மாட்டேன்!
இதோடு மாநிலத்தின் எந்த பகுதியிலும் ஏற்படும் பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் என்று மத்திய அரசு அறிவிப்பதில்லை. இந்தியாவில் இதற்கு முன்பும் எப்பொழுதுமே தேசிய பேரிடர் என ஒன்று அறிவிக்கப்பட்டதே இல்லை! மாநில அரசு வேண்டுமென்றால் தேசிய பேரிடர் என்று அறிவித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
Source : Dinamalar