திமுக மேயரை நீக்க, திமுக கவுன்சிலர்களே அனுப்பிய மனு! நம்பிக்கை இல்லா தீர்மானமா?

Update: 2023-12-31 01:55 GMT

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மீது அப்பகுதி கவுன்சிலர்களே தொடர் ஊழல் புகாரை முன்வைத்து மேயர் சரவணன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தையும் தாண்டி மேயரை பதவி நீக்க வேண்டும் என்று கோரிக்கையை முதல்வர் மு க ஸ்டாலின், அமைச்சர் கே என் நேரு, துறைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோரிடமும் முன்வைத்துள்ளனர் திருநெல்வேலி திமுக கவுன்சிலர்கள்! 

மேலும் திமுக மேயர் மீது தொடர்ந்து வெறுப்புணர்வையும் காட்டி வந்த திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணன் குறித்து பொது சுவரொட்டிகளை திருநெல்வேலி நகரம் முழுவதும் ஒட்டி இருந்தனர், அதுமட்டுமின்றி மேயர் சரவணன் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கிக்பேக் தொகையை தவறாக வினியோகித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து கவுன்சிலர்கள் தங்களது கவுன்சிலர் கூட்டத்தையும் புறக்கணித்தனர். 

இப்படித் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த திருநெல்வேலி கவுன்சிலர் மேயர் விவகாரம் தற்போது தீவிரமடைந்து 38 திமுக கவுன்சிலர்கள் தங்கள் கட்சியின் மேயர் சரவணனுக்கு எதிராகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி ஆணையர் சுபம் தியானந்தேராவ் தாக்கரேவிற்கு முறைப்படி மனு கொடுத்துள்ளனர். மேலும் இந்த மனுவில் திருநெல்வேலி மாநகராட்சி மன்ற உறுப்பினர்களால் மாமன்ற தலைவர் மீது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் ஜனவரி 12ஆம் தேதி காலை 11 மணிக்கு திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகம் ராஜாஜி மண்டபம் மாமன்ற கூட்டம் அரங்கில் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Source : The Commune 

Similar News