பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது நடவடிக்கை முரண்பாடானது! பின்னணியில் பொன்முடி! அண்ணாமலை பேட்டி!
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி இரண்டாம் தேதி தமிழகம் வருகை புரிந்து சுமார் 19, 000 மேல் மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைத்துவிட்டு சென்றப் பிறகு சேலத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், பிரதமரின் வருகை குறித்தும் தமிழக மக்கள் அளித்த ஆதரவு குறித்தும் தெரிவித்தார்.
அதாவது தமிழக பாஜகவினர் இடையே பிரதமர் மோடியின் வருகையால் மாபெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி நல்ல தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தியது தமிழக மக்களுடன் அவர் இணைந்துள்ளார் என்பதையும் காட்டுகிறது. அதுமட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, இதுவரை வழங்கப்பட்டு வந்த தொகையை விட நான்கு மடங்கு அதிகம் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்ட சம்பவம் தலைகுனியக் கூடிய அளவில் நடந்துள்ளது. சாதி கூறி திட்டியதாக முகாந்திரம் இல்லாமல் வழக்கு பதிவு செய்து துணைவேந்தரின் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசாரன் செயல்பாடுகள் சரியில்லை! மேலும் இந்த கைது நடவடிக்கை பொன்முடியும் தூண்டுதலாலே நடைபெற்றுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
Source : Dinamalar