சரியான டேட்டா வைத்து பேச வேண்டும்! கே. எஸ். அழகிரிக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!
மத்திய அரசின் கடன் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கூறிய கருத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், தமிழக அரசின் கடனை பற்றி பேசும் அண்ணாமலை மத்திய அரசின் கடனை குறித்து ஏன் பேசவில்லை என்று பத்திரிகையாளர் ஒருவர் மத்திய அரசின் கடன் 100% அதிகமாக உள்ளது என கே எஸ் அழகிரி ஒரு கேள்வியை முன் வைக்கிறார் என்றார், " கடனை ஒவ்வொரு மாநிலத்தின் உற்பத்தி திறனுடன் ஒப்பிட்டு பார்க்கிறோம், இன்று தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி திறனில் நமது மாநிலத்தின் கடன் 25 சதவீதம்! ஆனால் இந்தியாவினுடைய உற்பத்தி திறன் 3. 97 ட்ரில்லியன் டாலர் இதில் இந்தியாவின் கடனை பாருங்கள்! இதனால் டேட்டாவை சரியாக முன் வைக்க வேண்டும் அழகிரி அண்ணவாக இருதாலும் சரி வேறு எந்த தலைவராகவும் இருந்தாலும் சரி பேசும் பொழுது டேட்டாவை சரியாக கொடுக்க வேண்டும்.
ஒரு மாநிலம் கடன் வாங்க வேண்டுமா என்றால் கண்டிப்பாக வாங்க வேண்டும். கடன் வாங்கினால் மட்டுமே சிலவற்றை விரிவாக்கம் செய்ய முடியும் ஏனென்றால் நிதி தேவைப்படும்! ஆனால் கடன் இவ்வளவு வாங்க வேண்டுமா ஆட்சிக்கு வந்து 31 மாதத்தில் இரண்டு லட்சத்து 61 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளோம்! எல்லா நாட்டிடமும் கடன் இருக்கிறது அவர்களால் அவற்றை சமாளிக்க முடிகிறது ஆனால் தமிழகத்தால் சமாளிக்க முடியவில்லை! வருமானத்தையும் அதிகபடுத்தாமல் இருந்தால் கடனை எப்படி கட்டுவார்கள்! மேலும் தமிழ்நாட்டின் கடன் சர்வீசப்பல் டெப்டை தாண்டி சென்று விட்டது! இதன் தாக்கம் உங்களுக்கும் எனக்கும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தெரிய ஆரம்பிக்கும்" என்று பதிலளித்தார் அண்ணாமலை!
Source : Dinamalar