திமுக அரசே! கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் இழுக்கடிப்பதேன்? - அண்ணாமலை கேள்வி!
மானிய குழு பரிந்துரையின்படி கல்லூரிகளில் பணியாற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது எப்போது என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவியல் கூறியிருப்பதாவது :-
தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசு கல்லூரிகளில் 7,360 பேர் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆண்டுக்கு 11 மாத காலம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொகுப்பு உதவி வழங்கப்படுகிறது. இந்த கௌரவ விரிவுரையாளர்கள் அனைவருமே பள்ளி பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரைக்கப்படும், கல்லூரி உதவி பேராசிரியர் கான கல்வி தகுதி பெற்றவர்கள் மட்டுமின்றி அவர்களில் பலர் சிறப்பு தேர்வு எழுதி பணிவாய்ப்பையும் பெற்றனர். நிரந்தர பணியில் இருப்பவர்களுக்கான ஊதியம் சுமார் 80,000 ஆக இருக்கையில் முறையான தகுதியின் அடிப்படையில் தேர்வான கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் வெறும் ₹20,000 முதல் 25 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரையின் படி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூபாய் 50,000 மாத சம்பளமாக வழங்கப்பட வேண்டும். உரிய தகுதியுடன் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் சென்னை ஹை கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அனைவருக்கும் ரூபாய் ஐம்பதாயிரம் ஊதியம் வழங்க கோரி கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாநில பல்கலைக்கழக குழு விதிமுறைகளை பின்பற்றிதான் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் நடைபெற்றது என கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் கூறினார். ஆனால் தற்போது தமிழகத்தில்
பணியாற்றக்கூடிய கெளரவ விரிவுரையாளர்கள் எவரையும் பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நியமிக்கப்படவில்லை மானியக் குழு பரிந்துரைத்துள்ள மாதம் ரூபாய் 50,000 ஊதியம் வழங்க இயலாது என்றும் பொய்யான விளக்கத்தை திமுக அரசு அளித்துள்ளது. ஹைகோர்ட் தீர்ப்பை கூட மதிக்காமல் கௌரவ விரிவுரையாளர்களை வஞ்சித்து வரும் திமுக அரசின் செயல்பாடு முற்றிலும் கண்டிக்கத்தக்கது .உடனடியாக தமிழக அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விருத்தியாளர்களுக்கு மானியக் குழு பரிந்துரையின் படி ரூபாய் 50,000 ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபடுகின்ற கௌரவ விரிவுரையாளர்களை அச்சுறுத்தும் விதமாக நியாயமான கல்லூரி முதல்வர்கள் ,கல்லூரி கல்வி இணை இயக்குனர்கள் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.