தமிழகத்தின் மீது அக்கறை உள்ளதா முதல்வரே! ஹெச்.ராஜா அடுக்கிய கேள்விகள்!

Update: 2025-03-21 16:56 GMT
தமிழகத்தின் மீது அக்கறை உள்ளதா முதல்வரே! ஹெச்.ராஜா அடுக்கிய கேள்விகள்!

தமிழகத்தின் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் பற்றியும் முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்தும் தமிழகம் வந்த கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுவாரா என பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார் 

அதாவது தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டாதீர்கள் எனவும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முடிவை கைவிடுங்கள் என்றும் தமிழகத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை சகோதர உணர்வோடு நாங்கள் கேரள மாநிலத்திற்கு வழங்கி வருகிறோம் அதேபோன்று கேரளாவில் இருந்து ஆண்டுதோறும் கடலில் வீணாக கலக்கும் 2000 டிஎம்சி தண்ணீரில் ஒரு 200 டி எம் சி தண்ணீரை சகோதர உணர்வோடு நீங்கள் தமிழகத்திற்கு வழங்க முன்வர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவாரா

தமிழகத்தின் மீதும் தமிழக மக்கள் மீதும் உண்மையான அக்கறை முதல்வருக்கு இருந்திருந்தால் நிச்சயம் இந்த பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன் வைப்பார் தமிழகத்தின் நலன் மீதும் தமிழக மக்கள் மீதும் தமிழக முதல்வருக்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் 

Tags:    

Similar News