அரசியல்வாதிகள் என்றால் இப்படியா??போலீசாரை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதி!!
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறையில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தார். இந்த நிலையில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாநகராட்சியில் சில பணிகளுக்கு டெண்டர் ஒப்பந்தங்கள் இடப்பட்டபோது ரூ.98.25 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக அமைச்சர் வேலுமணி மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ரத்து செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணை நடந்தது.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கூடுதலான அரசு வழக்கறிஞர் ராஜ் திலக் என்பவரும் ஆஜராகினார். இந்த நிலையில் நீதிபதி அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் எதற்காக போலீசார் இவ்வளவு தாமதமாக செயல்படுகிறார்கள் என தெரியவில்லை என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் அரசு நிதி விவகாரங்களில் போலீஸ் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், எந்த நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அடுத்த விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.