பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வு.. பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி.!

பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்வு.. பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி.!;

Update: 2020-11-15 17:30 GMT

பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 74 தொகுதிகளிலும், ஜக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மேலும் 2 கூட்டணி கட்சிகள் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து முதலமைச்சர் பதவி குறித்து இன்று பாட்னாவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சராக நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி, துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனைதொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நாளை காலை 11.30 மணிக்கு முதலமைச்சராக நிதிஷ்குமார் பதிவியேற்கிறார். இவர் 4வது முறையாக முதலமைச்சராக பதவி வகிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. லாலு பிரசாத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியின் சார்பாக அவருடைய மகன் தேஜஸ் யாதவ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றிபெற வில்லை.

Similar News