"ஒன்னு நீ.. இல்லை நான்.." எழுதப்படாத ஒப்பந்தத்தில் அ.தி.மு.க, தி.மு.க - ரஜினி கட்சி துவக்கத்தில் நடக்கும் அரசியல்.!

"ஒன்னு நீ.. இல்லை நான்.." எழுதப்படாத ஒப்பந்தத்தில் அ.தி.மு.க, தி.மு.க - ரஜினி கட்சி துவக்கத்தில் நடக்கும் அரசியல்.!

Update: 2020-12-09 06:30 GMT

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாக திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் டிசம்பர் 31'ம் தேதி அன்று தனது கட்சி பற்றிய அறிவிப்பையும், வரும் ஜனவரி மாதத்தில் கட்சியையும் துவங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அதிக பாதிப்பை தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க ஆகியவை மிகுந்த கலக்கத்தில் உள்ளன.

காரணம் இந்த இரு கட்சிகளே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வந்துள்ளன. இந்ந நிலையில் தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேச செய்தியால் இவ்விரு கட்சிகளும் தூக்கமிழந்து தவிக்கின்றன என்று அதன் நடவடிக்கைகளில் இருந்தே தெரிகிறது.

திரு.ரஜினி அவர்கள் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 2017'ம் ஆண்டு டிசம்பர் 31'ம் தேதி அறிவித்தாலும் கடந்த வாரம் அதனை உறுதி செய்தது முதலே இவ்விரு கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாறி, மாறி கருத்து யுத்தத்தை நடத்தி கொண்டிருப்பது வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. 

குறிப்பாக திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் அறிவிப்பை பொருட்படுத்தாமல் இருப்பதாக காட்டிக்கொண்டு அதனை பத்திரிக்கையாளர்கள் கேள்விகளாக தொடுக்கும் போது இரு கட்சியை சார்ந்தவர்களுமே கிட்டதட்ட ஒரே பதிலை கூறினார். தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் இது பற்றி கேட்கும் போது "அவர் கட்சி துவங்கட்டும் பார்த்துக்கொள்ளலாம்" என கூறினார். அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இது பற்றிய கேள்விக்கு, "கட்சி துவங்கட்டும் பார்த்து கொள்ளலாம்" என கூறிவிட்டார்.

ஆனால் திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை செய்தி தமிழகத்தில் வயது வந்தவர்கள் முதல் வயதானோர் வரை சென்று சேர்ந்த நிலையில் இந்த இரு தலைவர்களும் ஏதோ ஒன்றுமே நடக்காதது போல் இதனை ஒதுக்கி பேசியிருப்பது அவர்களின் திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம் பற்றிய பயத்தை காட்டுகிறது.

குறிப்பாக திரு.ரஜினிகாந்த் அவர்கள் கடந்த வாரம் அரசியல் பிரவேச அறிவிப்பை உறுதி செய்த அன்று முதல்  இந்த இரு தலைவர்களும் மாறி மாறி வழக்கத்தை விட அதிகமாக அறிக்கை யுத்தத்தை ஏற்படுத்தியிருப்பது அரசியல் களத்தில் திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட கூடாது என ஒன்றுசேர நினைப்பது போல் தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

இதனை தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை எழுதப்படாத ஒப்பந்தமாக செயல்படுத்துவது போல் தெரிகிறது. ஆனால் வாக்கு சாவடியை நோக்கி வரும் மக்கள் அனைத்தையும் அறிவர். காலம் பதிலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.

Similar News